< Back
மாநில செய்திகள்
பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
26 Dec 2022 3:33 PM IST

பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.

தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பபடிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சீபுரம் என்ற முகவரியில் வருகிற 7-ந்தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்