< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான விண்ணப்பம் - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

10 July 2022 4:12 PM IST
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
2022-2023 ம் கல்வியாண்டில் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். நாளை முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.