புதுக்கோட்டை
மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு: இ-சேவை மையங்களில் அலைமோதும் பெண்கள் கூட்டம்
|மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்வதற்காக புதுக்கோட்டையில் உள்ள இ-சேவை மையங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது கடந்த 15-ந் தேதி முதல் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தும் பணம் கிடைக்காதவர்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொண்டு மேல்முறையீடு செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது. ம
ேலும் இதற்காக தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையங்களும், இ-சேவை மையங்களில் விண்ணப்பம் மேல்முறையீடும் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உதவி மையங்கள், இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இ-சேவை மையம்
புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்து வருகின்றனர். காலை முதல் இந்த இ-சேவை மையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இத்திட்டத்தில் மேல்முறையீட்டிற்காக ஆர்.டி.ஓ.விடம் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை விவரம் பின்னர் மொத்தமாக தெரியவரும். தற்போது இணையதளத்தில் தனித்தனியாக ஒவ்வொரு ஆர்.டி.ஓ. வாரியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் முடிந்ததும் முழுமையாக விவரம் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.