< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி பா.ஜ.க.வில் இணைந்தார்
|16 March 2024 2:32 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அனுஷா ரவி இன்று அறிவித்தார்
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரை செயலாளராக கோவையைச் சேர்ந்த அனுஷா ரவி கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அனுஷா ரவி இன்று அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவரான கமல்ஹாசனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், ம.நீ.ம. கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி, பா.ஜ.க.வில் இணைந்தார்.
மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் , அ.தி.மு.க. முன்னாள் எம்.பி., விஜயகுமார் ஆகியோர் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.