< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
10 நாட்களுக்கு அந்தியோதயா ரெயில் ரத்து
|15 July 2024 9:27 PM IST
ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக, 10 நாட்களுக்கு அந்தியோதயா ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக, தாம்பரம் - நாகர்கோவில் இடையேயான அந்தியோதயா விரைவு ரெயில் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரெயில் (20691) ஜூலை 23ந் தேதி முதல் ஜூலை 31ந் தேதி வரையும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஜூலை 22ந் தேதி முதல் ஜூலை 31ந் தேதி வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.