தேனி
ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம்
|ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜோதி, செயல் அலுவலர் ராஜசேகர், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.