< Back
மாநில செய்திகள்
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:10 AM IST

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, துணை தலைவர் தேன்மொழி வைத்தி, மாவட்ட கவுன்சிலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கணக்காளர் விஜயகுமார் வரவு-செலவு மற்றும் 32 விவாத பொருட்களை வாசித்தார். இதையடுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி மன்றத்தில் கூறிய அனைத்து பிரச்சினைகளும் உடனடியாக சுமுக தீர்வு எட்டப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் விளந்தை மேற்கு தொடக்கப்பள்ளி பழைய கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. பின்னர் அந்த கட்டிடத்தை ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து இடிக்கப்பட்டு ரூ.28 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். இதற்காக தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும், ஜெயங்கொண்ட சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. விளந்தை 3-ம் நம்பர் ரேஷன் கடை 25 ஆண்டு காலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் நிதியிலிருந்து ரூ.12½ லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதேபோல் விளந்தை அருந்ததியர் தெரு மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாடு மற்றும் சிமெண்டு சாலை அமைக்க உதவிய தொல். திருமாவளவன் எம்.பி.க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விளந்தை தெற்கு கவுன்சிலர் அம்மா சண்முகம் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்