< Back
மாநில செய்திகள்
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு

தினத்தந்தி
|
21 May 2022 1:14 AM IST

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூர்:

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினமான மே 21-ந்தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 21-ந்தேதி சனிக்கிழமையான இன்று வருவதால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை அனைத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் போலீசார் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்