< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
|15 July 2023 12:45 AM IST
கூடலூர் அரசு கல்லூரியில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கூடலூர்
கூடலூர் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான முகமது அன்சாரி உத்தரவின் பேரில், மாணவர்களுக்கு ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் கலந்து கொண்டு, மாணவர்கள் இடையே சட்ட விழிப்புணர்வு மற்றும் ராக்கிங்குக்கு எதிரான கருத்துகள் குறித்து பேசினார். சட்டப்பணிகள் குழுவின் வழக்கறிஞர்கள் விஜயகுமார், ஸ்ரீஜேஷ் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினர். இதில் கூடலூர் வட்ட சட்ட பணிகள் குழு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.