< Back
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தினத்தந்தி
|
12 Aug 2023 12:11 AM IST

திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காவல் துறையின் சார்பில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நடத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்