< Back
மாநில செய்திகள்
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு

தினத்தந்தி
|
17 Feb 2023 6:45 PM GMT

நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு

நாகர்கோவில்,

நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள விவசாயிகளுக்குரிய நெல் மூடைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுகிறதா?, கொள்முதல் நிலையங்கள் அரசின் விதிகளுக்குட்பட்டு செயல்படுகிறதா?, முறைகேடுகள் ஏதேனும் நடக்கிறதா? என கண்காணித்து ஆய்வு நடத்த உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோர் நாகர்கோவில் அருகே உள்ள தேரூா் மற்றும் கடுக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள நெல்லின் அளவு, நெல் மூடைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அங்கிருந்த நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

மேலும் செய்திகள்