< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

தினத்தந்தி
|
27 Jun 2023 3:14 AM IST

பரப்பாடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி நடந்தது.

இட்டமொழி:

பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி நேற்று நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கினார். வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் பாபுசெல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்