< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
26 Jun 2023 11:51 PM IST

ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கல்லூரி முதல்வர் அ.முகமது சாதிக், கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சூரியா ஆகியோர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கலவை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

முடிவில் கலவை தாசில்தார் ஏ.எம்.இந்துமதி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

ஊர்வலத்தில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்