மயிலாடுதுறை
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு நாட்டு நலப்பணி திட்ட முகாம் அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை தி.ப.தி.அர.தேசிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். அசிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி ஏழிலன் வரவேற்றார். இதில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலமானது அசிக்காடு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் பிரசார வாகன முன் செல்ல ஒருவர் பின் ஒருவராக சென்றனர். முன்னதாக அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது மயிலாடுதுறை சி.சி.சி. சமுதாயக் கல்லூரி தலைவர் காமேஷ், ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை கிங்ஸ் தலைவர் பால சரவணன், சமூக ஆர்வலர் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, பணிதள பொருப்பாளர் மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.