< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
|23 Jun 2023 4:38 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், பேரணியும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமை தாங்கி போதை விழிப்புணர்வு உறுதி மொழியையும், பேரணியும் தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று போதை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரச்சுரங்களை போலீசார் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.