திருவண்ணாமலை
பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
|ஆரணி டவுண் போலீஸ் நிலையம் சார்பாக சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆரணி
ஆரணி டவுண் போலீஸ் நிலையம் சார்பாக சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமை தாங்கி சர்வதேச போதை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''போதையால் ஒருவன் குடும்பத்தையும், நிம்மதியையும் இழக்கிறான். கொலையாளியாகவும், சமூக விரோத நபராகவும் மாறச் செய்கிறார், அவற்றை விடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும.் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பேரணி ஆரணி கோட்டை மைதானம், பழைய, புதிய பஸ் நிலையம் வழியாக, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு சென்று மீண்டும் நகர காவல் நிலையம் வந்து நிறைவு பெற்றது.
தொடர்ந்து போதை ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடமும், கடை உரிமையாளர்களிடமும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், போலீசார் பங்கேற்றனர்.