< Back
மாநில செய்திகள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி
மாநில செய்திகள்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

பாவூர்சத்திரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி நடைபெற்றது. பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணியை பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தொடங்கி வைத்தார். பஸ் நிறுத்தம், முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி இறுதியில் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பள்ளி தாளாளர் மோயீசன் அடிகளார், ஆசிரியர்கள் ராஜா, ராஜேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தங்கதுரை செய்திருந்தார்.

மேலும் செய்திகள்