< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
நீலகிரி
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
18 Dec 2022 12:15 AM IST

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊட்டி

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம் சார்பில் முத்தொரை பஜாரில் இருந்து முத்தோரை பாலாடா வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதற்கு ஊட்டி ஊரக உட்கோட்ட போலீஸ் துணை சூப்பர் விஜயலட்சுமி தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை முழங்கியபடி சென்றனர்.

மேலும் செய்திகள்