< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
13 Sept 2022 4:10 PM IST

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அப்போது, போதைப்பொருட்கள் உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்