கோயம்புத்தூர்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
|ஆனைமலையில் போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆனைமலை
ஆனைமலையில் போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி சென்றது. இதற்கு வால்பாறை உட்கோட்ட துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமை தாங்கி பேசும்போது, போதைப்பொருள் குறித்து மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் போதைப்பொருள் புழக்கம் உள்ள பகுதிகளில் சிறப்பு தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வழக்கில் கடந்த 10 நாட்களில் மட்டும் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றார். இதில் ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு போலீஸ் நிலையங்களின் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், செல்வராஜ், முருகவேல் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.