< Back
மாநில செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி
மாநில செய்திகள்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

செங்கோட்டையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சிலை முன்பு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணா்வு பேரணி நடந்தது. தாசில்தார் முருகுசெல்வி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனா். பேரணி வாஞ்சிநாதன் சிலை முன்பு தொடங்கி தாலுகா அலுவலகம் வளாகம் சென்று நிறைவடைந்தது.

பேரணியில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு கோஷங்கள் எழுப்பிச் சென்றனா்.

நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் ராஜமணி, தேர்தல் தனித்துணை தாசில்தார் சிவன்பெருமாள், வருவாய் ஆய்வாளா்கள் மாடசாமி, சரவணன், கிராம நிர்வாக அலுவலா்கள் ஆயிஷாள், காளிச்செல்வி மற்றும் கிராம நிர்வாக உதவியாளா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் செய்திகள்