< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
|5 Oct 2023 12:30 AM IST
ஊட்டியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பழக்கத்தை குறைப்பதற்காக மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி மேற்பார்வையில் ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீசார் போதை பொருட்கள் ஒழிப்பு சம்பந்தமாக இத்தலார் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் போலீசார், சமூக ஆர்வலர்கள், மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியின் போது போதை பொருட்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் எந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை சப்-இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சவுந்தரராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.