< Back
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தினத்தந்தி
|
4 Aug 2023 12:15 AM IST

சாயர்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சாயர்புரம்:

சாயர்புரம் போப் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. கல்லூரி முதல்வர் (ெபாறுப்பு) டாக்டர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி அப்துல் காசிம், கலால் உதவி ஆணையர் (பொறுப்பு) தாமஸ் பயஸ் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பியபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது.

இதில் வேதியியல் துறை பேராசியை இளவரசி ஜெயமலர், இளைஞர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் பேராசிரியர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர் ஜெபசிங் கோரஸ், ஜெனிதா தேவநேசம், கேப்ரியல் சதீஷ், மெர்லின் சலோமி, எப்சிபா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி செயலாளர் நிகர் பிரின்ஸ் கிப்சன், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்