ராணிப்பேட்டை
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
|அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரப்பாக்கம்,
வேலூர் அடுத்த அரப்பாக்கம் அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை இணைந்து போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் மற்றும் பொருளாளர் தாமோதரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரையா துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.வி.கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி பேசினார். அப்போது போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மாணவர்கள் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப் படுகிறது என்றும் விளக்கினார். தொடர்ந்து அன்னை மிரா கல்லூரி மாணவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேச்சு போட்டி, நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குனர்கள் பிரசாந்த், கிஷோர், முதல்வர் கோபிநாதன், துணை முதல்வர் சரவணன், நிர்வாக அதிகாரி சாண்டில்யன், ஆற்காடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி, ரத்தினகிரி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.