< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி
|18 July 2023 11:19 PM IST
அரக்கோணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடந்தது.
அரக்கோணம்
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ஆதிதிராவிடர் நல மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்து ஓவியப் போட்டி, கட்டுரை போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
அப்போது அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியை மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.