< Back
மாநில செய்திகள்
கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
அரியலூர்
மாநில செய்திகள்

கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

தினத்தந்தி
|
13 May 2023 12:59 AM IST

கல்லூரியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார குழு அமைப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி புல முதல்வர் டாக்டர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர்களுக்கு, போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை எப்படி கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பது. போதைக்கு அடிமையாகும் மாணவர்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாணவர்களுக்கு எங்கிருந்து போதை பொருட்கள் வருகிறது என்பதை 100-க்கு போன் செய்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ், கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்