< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
|22 Jun 2023 12:39 AM IST
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
போதைப்பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துக்கூறினார். குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார். கவுதமபுத்தர் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிறப்பு பள்ளி மாணவர்களின் மவுன நாடகம் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.