< Back
மாநில செய்திகள்
அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

தினத்தந்தி
|
27 April 2023 8:22 AM IST

அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் டி.ஆர்.ஓ.ரேங்கில் பணியாற்றும் அரசு அலுவலர், கிராம நிர்வாக அலுவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோல கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் ஒருவரது வீட்டிலும் ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனைக்கான முழுமையான விவரங்கள், காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்