முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை
|முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகிறனர். தங்கமணிக்கு சொந்தமான பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரி பார்த்து வருகின்றனர். மேலும் திருச்செங்கோட்டில் உள்ள தங்கமணி வீட்டில் வருவாய்,பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்து ஆவணங்களை சரிபார்த்தனர். நில அளவிடும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இடத்தின் மதிப்பு, எவ்வளவு இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது, எந்தெந்த இடங்களில் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருவது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அதில் பணம் மற்றும் தங்க நகைகள்மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது