< Back
மாநில செய்திகள்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
12 Aug 2022 6:43 PM GMT

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழி வாங்கும் நோக்கத்தோடு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் வீட்டிலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்