< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
|23 Jun 2023 8:54 AM IST
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
சென்னை,
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் ஆர்.எம்.காலணியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி இருந்தபோதுகொரோனா காலத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள மகேஸ்வரியின் வீடு மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.