< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை விடிய விடிய சோதனை: ரூ.2.14 லட்சம் பறிமுதல்
|6 July 2023 10:24 AM IST
சென்னை எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நீர்வளத்துறை அலுவலகத்தில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நேற்று விடிய விடிய நடைபெற்ற சோதனையில் இறுதியில் அங்கு ரூ.2.14 லட்சம் கணக்கில் காட்டப்படாத தொகை கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீர்வளத்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.