ஈரோடு
மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
|ஊர்வலம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மதுப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகள், 'கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்போம், மதுவை நிறுத்து மரணத்தை விரட்டு, போதையில் தள்ளாட்டம் வாழ்க்கையில் திண்டாட்டம், மானத்தோடு வாழ மதுவை மறப்போம், கள்ளச்சாராயம் அருந்துவது உடல் உறுப்புகளை செயலிழக்க செய்யும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
ஈரோடு அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் உதவி ஆணையாளர் (கலால்) சிவகுமரன், கோட்ட கலால் அலுவலர் குமரேசன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டார்கள்.