< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குரூப்-2 தேர்வுகளுக்கான விடைகள் - டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு
|27 May 2022 11:46 PM IST
நடந்து முடிந்த குரூப்-2 தேர்வுகளுக்கான சரியான விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை,
குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்வின் தற்காலிக விடைத்தாள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், விடைகளில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.