< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்களை 3 மையங்களில் திருத்த ஏற்பாடு
|27 March 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்களை 3 மையங்களில் திருத்த ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த 13-ந் தேதியும், பிளஸ்-1 தேர்வு 14-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் அடுத்தமாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி முடிவடைகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி, குருசாமிபாளையம் வித்யாமந்திர் ஆகிய 3 மையங்களில் திருத்தப்பட உள்ளது. இதற்கான முகாம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.