< Back
மாநில செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மற்றொருவரும் பிணமாக மீட்பு
அரியலூர்
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மற்றொருவரும் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
16 May 2023 12:46 AM IST

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மற்றொருவரும் பிணமாக மீட்கப்பட்டார்.

கீழப்பழுவூர்:

ஆற்றில் மூழ்கினர்

அரியலூர் மாவட்டம், பெரியமறை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 54). இவர் கடந்த 13-ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டுவதற்காக சென்றபோது கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினார். அவரை தேடுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய தஞ்சாவூர் மாவட்டம், மடம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(54) என்பவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இதில் அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரியலூர் தீயணைப்புத் துறையினர், ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் ஆகியோரின் கடும் முயற்சியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பிணமாக மீட்பு

இதில் நேற்று முன்தினம் முருகானந்தம் பிணமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் நேற்று 3-வது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. இதில் ஆறுமுகம் பெரியமறை கிராமம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்