< Back
மாநில செய்திகள்
100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
30 May 2023 1:40 AM IST

விக்கிரமசிங்கபுரத்தில் 100 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீசார் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வாகன சோதனையின் போது லாரியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை மறைத்து கடத்தி வந்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த தளவாய்மாடன், இசக்கிமுத்து, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரவீன், மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்லத்துரை, ஆந்திரமாநிலம் காஜிவாக்காவை சேர்ந்த கலீம் துர்கா பிரசாத், ரமணா ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆந்திர மாநிலம் ரோலுகுண்டாவை சேர்ந்த கோட்டீஸ்வரன் (வயது 40) என்பவரை விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் சுஜி ஆனந்த் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்