< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண்
|31 March 2023 12:15 AM IST
சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசனின் மகன் ரோஹித் ராஜ் (வயது 14). கடந்த 12-ந் தேதி இரவு அதே பகுதியில் உள்ள கழிவறையில் வைத்து மது பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன்(22), திருநகரை சேர்ந்த அய்யனார்(23), பெரியம்மாபாளையத்தை சேர்ந்த ரஞ்சித்(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையிலும், 17 வயதுடைய 3 சிறுவர்களை கைது செய்து இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராகுல் என்ற வெங்கடேசன் (19) நேற்று மதியம் வக்கீல் மூலம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.