கன்னியாகுமரி
மோட்டார் சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு
|ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மேலும் ஒருவர் சாவு
ஈத்தாமொழி,
நாகர்கோவில் அருகே உள்ள கீழகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் வினோத் (வயது24). இவரும் இலந்தையடித்தட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சந்தோஷ்ராம் (20), மேலகிருஷ்ணன்புதூர் ராமன்புதூரை சேர்ந்த அப்பாதுரை மகன் சதீஷ் (20) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் 3 பேரும் கடந்த 16-ந் தேதி இரவு 11.30 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் மேலகிருஷ்ணன்புதூரில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். செம்பொன் கரை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வினோத் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சந்தோஷ்ராம், சதீஷ் ஆகிய இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்ராம் நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.