< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஏழுமலை (வயது 36), விவசாயி. இவர் உறவினரான அதேஊரை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் உ.நெமிலியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி புறப்பட்டார். உ.நெமிலி கூட்டுரோடு அருகே சென்றபோது, ஏழுமலை, சக்திவேல் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏழுமலை மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கூவாடு கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரும் உயிரிழந்தனர். சக்திவேல் மற்றும் பெரியசாமியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த கூவாடை சேர்ந்த சிவா என்பவரும் பலத்த காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிவா உயிரிழந்தார். சக்திவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்