அரியலூர்
அடகு கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
|அடகு கடை கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
தாமரைக்குளம்:
209 பவுன் நகைகள் கொள்ளை
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் சங்கர் லால் என்பவர் அடகு கடை வைத்திருந்தார். கடந்த ஆண்டு அக்ேடாபர் மாதம் இவருடைய நகைக்கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு 209 பவுன் நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் சிவகுமார், ராஜா, பிரியா, கராத்தே முருகா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
வாலிபர் கைது
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சின்னசேலத்தை சேர்ந்த மாரியப்பிள்ளையின் மகன் மணிகண்டன் என்ற பொத்தமுருகனை(வயது 25) போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்களிடம் இருந்து இதுவரை ெமாத்தம் 151 பவுன் நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான சுரேஷ், ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்த தனிப்படையினரை மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.