< Back
மாநில செய்திகள்
கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
10 Nov 2022 2:20 PM IST

கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு, வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்து வரும் காசிநாதன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

துணை நடிகையிடம் இவர், தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். ேமலும் இது தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி கடந்த ஜூன் மாதம் தனது வீட்டுக்கு இரவு நேரத்தில் வரவழைத்தார்.

இதை நம்பி அங்கு சென்ற துணை நடிகை, காசிநாதன் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பர் பரமதாஸ்(42) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது காசிநாதன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகை கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர் அங்கு வந்து அவரை மீட்டார். இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது நண்பர் பரமதாஸ் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்