< Back
மாநில செய்திகள்
லாரி மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் சாவு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

லாரி மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் சாவு

தினத்தந்தி
|
18 July 2023 10:42 PM IST

வாணியம்பாடியில் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

லாரிகள் மோதல்

வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்பியது.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தேசிய நெடுஞ்சாலைக்கு திரும்பிய லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உதிரி பாகங்கள் ஏற்றி சென்ற லாரி டிரைவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 50) என்பவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

அங்கிருந்தவர்கள் உடனடியாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து அரை மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கி இருந்த டிரைவர் உடலை மீட்டனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

மேலும் விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்