< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம் காப்பகத்திலிருந்து தப்பிய மேலும் ஒரு சிறுமி மீட்பு.!
மாநில செய்திகள்

காஞ்சிபுரம் காப்பகத்திலிருந்து தப்பிய மேலும் ஒரு சிறுமி மீட்பு.!

தினத்தந்தி
|
8 April 2023 9:11 AM IST

கானாமல் போன சிறுமிகளில் இன்று மேலும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் போலீசாரால் மீட்கப்படும் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் தங்கி இருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பேர் திடீரென மாயமானார்கள். காப்பக பாதுகாவலர் ஆய்வு செய்தபோது 6 பேர் காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காதல் விவகாரத்தில் மீட்கப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணை மற்றும் தேடுதலை தொடர்ந்து கானாமல் போன 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவர் மீட்கப்பட்டார். நண்பர் வீட்டில் தஞ்சமடைந்த ஈரோடு சிறுமியை தனிப்படை போலீசார் மீட்டனர். இன்னும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்