< Back
மாநில செய்திகள்
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு
மாநில செய்திகள்

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு

தினத்தந்தி
|
15 April 2023 5:50 PM IST

தன்னுடைய கதையைத்தான் பிச்சைக்காரன்-2 திரைப்படமாக எடுத்துள்ளதாக உதவி இயக்குநர் பரணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் 2016-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. தற்போது பிச்சைக்காரன் 2-ம் பாகம் தயாராகி உள்ளது. இதில் விஜய் ஆண்டனியே கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்துள்ளார்.

பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பயன்படுத்தியதாக இந்த திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன்னுடைய கதையைத்தான் பிச்சைக்காரன்-2 திரைப்படமாக எடுத்துள்ளதாக உதவி இயக்குநர் பரணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்