< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட மேலும் 27 பவுன் நகை மீட்பு
|12 Nov 2022 1:00 AM IST
நகைக்கடையில் திருட்டு போன மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட மேலும் 27 பவுன் நகை மீட்கப்பட்டது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டு போயின. இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய தீபக் (வயது 28) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இவரிடம் இருந்து ஏற்கனவே 44 பவுன் நகைகளை மீட்டனர். இந்த நிலையில் தொடர் விசாரணையில் அல்லிக்குட்டை பகுதியில் ஒரு காட்டு பகுதியில் நகைகளை புதைத்து வைத்து இருப்பதாக கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மண்ணில் புதைத்து வைத்திருந்த மேலும் 27 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.