< Back
மாநில செய்திகள்
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

தினத்தந்தி
|
27 Jun 2023 10:28 AM GMT

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.

ஆரணி

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.

ஆரணி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்கும், 108 வலம்புரி சங்குகளால் புனித நீர் நிரப்பியும் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜைகளை அர்ச்சகர்கள் நடத்தினர்.

பின்னர் பூஜிக்கப்பட்ட கலசம் மற்றும் சங்குகளால் நிரப்பப்பட்ட புனித நீரையினால் அம்மனுக்கும், பரிவார சாமிகளுக்கும் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

விழா குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர். சுப்பிரமணி, நேமிராஜன், என். சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர் ரம்யா குமரன், செல்வராஜ், பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ. சரவணன், வேலன், ஜெகன், வக்கீல் சக்கரவர்த்தி, ஏ. இ. சண்முகம், மாமண்டூர் பி. சுப்பிரமணி, மற்றும் விழா குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் தொழிலதிபர் பி.நடராஜன், பரமேஸ்வரி ஆகியோர் செய்து இருந்தனர்.

இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜூலை 21-ந் தேதி ஆடி வெள்ளி விழாவை சிறப்பாக நடத்துவதும், 22-ம் தேதி திரைப்பட இன்னிசை பாடகர் தீனா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்