தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு
|வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தென்காசி,
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.
வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென்காசி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் நாளை (வியாழக்கிழமை) வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.