< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என அறிவிப்பு
|5 Dec 2023 6:41 AM IST
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்த நிலையில், புயல், கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையைப் பின்பற்றி காலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.