மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு
|புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
சென்னை,
தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது. புயலாக வலுவிழந்த மாண்டஸ் சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. மாண்டஸ் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவித்துள்ளது.